நிகர் நிலை பல்கலைகழகம் - என்ன பிரச்சினை?
மதுரை தியாகராஜர் கல்லூரியும் கோவை பி எஸ் ஜி கல்லூரியும் நிகர் நிலை பல்கலைகழகமாக மாறுவதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல நாளொரு பல்கலைக்கழகம் வந்துகொண்டிருக்கும்போது ஐம்பது ஆண்டுகளை கடந்த, நல்ல சேவை செய்த கல்வி நிறுவனம் பல்கலை கழகமாக மாறுவதில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்படும் என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் நலன் காக்கப்படும் என்று அரசும் துணை முதல்வரும் உத்தரவாதம் அளித்த பிறகும் ஏன் இந்த போராட்டம்? உண்மையிலேயே வேறு பிரச்சினைகள் இருந்தால் அதை அரசிடம் எடுத்து சொல்லி தீர்வு காணலாமே? அதை விடுத்தது வீதிக்கு வந்து போராடுவது கல்வியாளர்களுக்கு அழகா?
நமது நாட்டின் கல்வி நிலை, படித்தோர் விகிதம், பட்ட மேற்படிப்புக்கு வருவோரின் எண்ணிக்கை இதையெல்லாம் மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளதவர்கள் இல்லை இந்த போராட்டக்காரர்கள். நம்மை விட குறைந்த ஜனத்தொகை கொண்ட நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் 5000௦௦௦ க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளது. நமது நாட்டிலோ 500௦௦ க்கும் குறைவான பல்கலைக்கழகங்கள்தான் உள்ளது. உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்களில் 25 சதவீதம் பேர்தான் கல்லூரிக்கு வருகிறார்கள். பட்ட மேற்படிப்புக்கு பத்து சதவீதம் பேர்தான் வருகிறார்கள். இதை எல்லாம் மாற்ற வேண்டும், கல்வி நிலை உயர வேண்டும் என்று ஏன் இந்த ஆசிரியர்கள் விரும்பமாட்டேன் என்கிறார்கள்?
ஏதோ மேல்நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் எல்லாம் சத்தியவான்கள் போலவும் நம் ஊர் பல்கலைக்கழகங்கள் தான் மட்டம் எனவும் இவர்களிடையே ஒரு கருத்து உள்ளது. மேல்நாட்டு பல்கலைகழகங்களின் லட்சணம் இங்கு உள்ளவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டாக்டர் பட்டம் கொடுப்பதிலிருந்து தெரியவில்லையா?
கல்வி என்பது தனியார் மயமாகக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அது முதலில் ஆரம்பக்கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். போராடும் இந்த வாத்தியார்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் சேராமல் அரசுப் பள்ளியிலும் கார்பொரேஷன் பள்ளியிலும் படிக்கிறார்களா? யார் யாரெல்லாம் அப்படி படிக்கவைத்திருகிறார்களோ அவர்கள் போராடட்டும். மற்றவர்கள் தயவு செய்து விலகி வழி கொடுங்கள். ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.
வீதி தோறும் கலையின் விளக்கம் ஊர்கள் தோறும் கல்விச்சாலை கேட்ட பாரதியின் கனவை நனவாக்குவோம்! ஜெய் ஹிந்த்!
Sunday, December 12, 2010
Saturday, November 27, 2010
meenakshi maindhan: Endru theerum intha thalaimai panjam?
meenakshi maindhan: Endru theerum intha thalaimai panjam?: "என்று தீரும் இந்த தலைமை பஞ்சம்? ஒரு தலைவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிறையவே தகவல்கள், புத்தகங்கள் வந்துவிட்டது. இருந்தப..."
Endru theerum intha thalaimai panjam?
என்று தீரும் இந்த தலைமை பஞ்சம்?
ஒரு தலைவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிறையவே தகவல்கள், புத்தகங்கள் வந்துவிட்டது. இருந்தபோதும் கடந்த 40௦ ஆண்டுகளாக ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தமிழகம் தவிக்கிறதே ஏன்? பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்யமூர்த்தி போன்றோர்கள் இருந்த இடத்தில ஏன் இன்று வழிநடத்தி செல்ல ஒரு நல்ல தலைவன் கிடைக்கவில்லை?
ஒரு நல்ல தலைவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? தனது கீழ் உள்ள தனது தொண்டர்கள், மக்கள் நலன் கருதி, தனக்குப் பிடிக்கவில்லை என்றால் கூட அவர்களுக்காக சில இடங்களில் விட்டுக் கொடுத்து போக வேண்டும். நாட்டு நலன் கருதியவர்கள் அப்படித்தானே இருந்திருக்கிறார்கள்.
நம் நாட்டு விடுதலை போரின் உச்ச கட்டம். இந்தியாவை இரண்டாகப் பிரித்துத்தான் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் ராஜ தந்திரம். ஜின்னாவும் அதையே கேட்கிறார். மகாத்மா காந்தியோ ஒரே இந்தியாதான் வேண்டும் என்கிறார். சிக்கலைத் தீர்க்க வட்ட மேஜை மாநாடு கூட்டப்பட்டது. காந்தியும் ஜின்னாவும் லண்டன் செல்கிறார்கள். அங்கே அரசியாரின் முன்னிலையில் பேச்சு நடக்கிறது. முடிவு ஏதும் எட்டப்படவில்லை. பொழுது சாய்ந்துவிட்டது. எனவே நாளை பேசலாம் என்று மற்றவர்கள் எழுந்துவிட்டார்கள். இருந்தபோதிலும் மறு நாளாவது ஒரு நல்ல முடிவு வர வேண்டும் என்றால் இவர்களில் யாரவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆகையினால் இவர்கள் இருவரும் இன்று மாலை தனியே சந்தித்துப் பேசினால் நல்லது என்று முடிவு செய்யப்பட்டது.
அப்படியெனில் எங்கு சந்திப்பது என்று யோசித்தபோது காந்தி தான் தங்கியிருக்கும் விடுதிக்கு ஜின்னாவை அழைத்தார். ஜின்னாவோ தான் தங்கியிருக்கும் இடத்திற்கு காந்தியை வருமாறு கூறினார். இருப்பினும் காந்தி இருக்கும் இடத்திற்கு ஜின்னா போவது என்று முடிவாயிற்று. ஜின்னாவும் உடனே அங்கு நான் வரும்போது என்ன தருவீர்கள் என்று கேட்க காந்தியும் எது வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறிவிட்டார். எதனை மணிக்கு சந்திப்பது என்பதை முடிவு செய்தவுடன் இருவரும் தங்கள் தங்கள் இடத்திற்கு திரும்பிவிட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு ஜின்னா, காந்தி இருந்த இடத்திற்கு வந்துவிட்டார். காந்தியும் எழுந்து சென்று மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டவுடன் ஜின்னாவும், தான் கேட்பதை காந்தியால் தரமுடியாது என்ற நினைப்புடன் சற்றே கிண்டலாக விஸ்கி அன் சோடா என்றார். உடனே அண்ணல் காந்தியடிகள் ஒரு பாட்டில் விஸ்கியும் ஒரு சோடா பாட்டிலையும் எடுத்து ஜின்னாவிடம் நீட்டி, மன்னிக்கவும் எனக்கு எப்படி ஊற்றுவது என்று தெரியாது நீங்களே ஊற்றிகொள்ளுங்கள் என்றாராம். தேச ஒற்றுமைக்காக காந்தி தன் வாழ் நாளில் தன் கையால் தொட்டிராத மது பாட்டிலை எடுத்துக் கொடுத்தார்.
இன்று, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தான் ஒரு கிறிஸ்துவராக இருந்தும் தீபாவளி கொண்டாடுகிறார். வாழ்த்து சொல்கிறார். ஆனால், நம் முதல்வர் அவர்களோ, கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டே, தலையில் குல்லா வைத்துக்கொண்டு, பக்ரித், ரம்ஜான் கொண்டாடுகிறார். அந்த மதத்தவருக்கு வாழ்த்து சொல்கிறார். ஆனால், இந்து மதப் பண்டிகைகளான தீபவளிக்கோ, விநாயகர் சதுர்திக்கோ வாழ்த்துச் சொல்ல மறுக்கிறார். (விநாயக சதுர்த்தியை முன்னிட்டு - மன்னிக்கவும், விடுமுறை தினத்தை முன்னிட்டு கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்சிகள் நடத்தி விளம்பர வருமானத்தை பார்த்துக்கொள்வது - அது தனி) வாழ்த்து சொல்லும் எதிர்கட்சித் தலைவியைப் பார்த்து, இதுதான் பெரியார், அண்ணா வழி நடப்பதா என்று கேள்வி கேட்கிறார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அவரது அரசியல் ஆசான் சொல்லியது மறந்து போயிற்று போலும். நீங்கள் ஒரு கட்சியின் தலைவர் என்றால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள், ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் இந்துக்களும் வாழ்த்து சொல்லுங்கள், ஒபாமாவைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள் என்று முதல்வரிடம் யார் சொல்வது?
குடும்ப அரசியலை எதிர்த்து கொதித்து எழுகிறேன் என்று சொல்லும் எதிர் கட்சித் தலைவியோ தனது தோழியின் குடும்பத்தை கட்டிக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார். பாட்டளிகளின் தோழன் என்று அரசியலுக்கு வந்தவரோ தனது மகன், மருமகள் என்று இசித்துகொண்டு இருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று வந்த புரட்சிக் கலைஞரோ தனது மனைவி, மைத்துனன் என்று ஒரு தமிழ் பட பாடல் காட்சி வெள்ளை தேவதைகளை போல் ஒரு கூட்டத்தையே அழைத்து வருகிறார். வைகோவோ என்ன செய்வது, யாருடன் கூட்டு வைப்பது என்று தெரியாமல் மயங்கி நிற்கிறார். மாவீரனோ, இங்கு இருக்கும் தமிழர் நிலை மிகவும் நன்றாக இருப்பதாக நினைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரைக் காப்பாற்றப் புறப்பட்டுவிட்டார்.
இங்கு இருக்கும் சினிமா பட உலகத்திற்கோ கலைஞருக்கு நன்றி சொல்லவே நேரம் போதவில்லை. மின் ஊடகங்களுக்கோ மெகா தொடரை விட்டுவிட்டு வெளியே வரவே முடியவில்லை. பத்திரிகைகளில் ஒன்றிரண்டு மட்டும் ஈனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இளிச்சவாய் தமிழனோ இன்னும் என்ன, என்ன இலவசம் கிடைக்கும் என்று அண்ணாந்து நின்றுகொண்டு இருக்கிறான்.
Monday, November 22, 2010
Nerkuppai - malarum ninaivukal-2.
மலரும் நினைவுகள் - ௨
நாங்கள் அப்போது 1960 மதுரையில் சுப்ரமணியபுரம் என்ற இடத்தில் இருந்தோம். இப்போது மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள இரண்டாவது பாலத்தில் இருந்து இடது புறம் திரும்பிப்போனால் இடது புறம் உள்ள நாலாவது அல்லது ஐந்தாவது வீடு என்று நினைக்கின்றேன். அங்கு நான், சிட்டாச்சி, சுசியாச்சி ஆகியோர் இருந்தோம். அங்கே கமலாச்சி வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் வீட்டருகே விறகுக்கடை இருக்கும். அங்கு சென்றுதான் விறகு வாங்கிவர வேண்டும். நானும் சுசிஆச்சியும் போய் வாங்கி வருவோம். ஒரு தூக்கு என்பது 20௦ கிலோ . விறகுக்கடைக்கு அருகே கமலாச்சி வீடு இருந்ததால் அங்கு சென்று சற்று நேரம் விளையாடுவோம். அப்போது கமலாச்சி மகன் ராமன் கை விரலகளை நறுக்கென்று கடித்துவிடுவான்.
அங்கு ராதா பால் ஐஸ் வண்டி வரும். வயதான கிழவர் ஒருவர் தள்ளி வருவார். எனக்கு தினமும் ஐஸ் வாங்கவேண்டும். ஐந்து பைசா ஒரு ஐஸ். தினமும் அண்ணன் காசு தந்துவிடுவார்கள். வீட்டிலிருந்து சற்று தூரத்தில் பள்ளி கூடம் இருந்தது. அங்க ஒன்னாப்பு படித்தேன். சில மாதங்களில் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு மஹால் எதிரே உள்ள மாடி வீட்டுக்கு குடி போய்விட்டோம். அங்கு போன முதல் நாள் அந்த ரோட்டில் அதே ராதா ஐஸ் வண்டி வந்தது. அவரைப் பார்த்ததும் நான் மாடியில் போய் காசுவாங்கிக் கொண்டு வந்து, ஐஸ், ஐஸ் என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினேன். அவர் என்னைய்ப் பார்த்ததும் ஏன்டா சுப்ரமணிபுரத்தில் இருந்து ஓடி வருகிறாயா என்று கேட்டார். அந்த நிகழ்வு இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.
மஹால் வீட்டில் இருக்கும்போது பாலஸ் ரோடின் முனையில் இருந்த முனிசிபல் பள்ளியில் படித்தேன். அப்போது ஒரு நாள் ஒரு பையன் என்னை உரண்டை இழுத்துவிட்டான். உடனே பள்ளியில் இருந்து வேகமாக ஓடி வந்து பைக்கட்டை அண்ணனிடம் கொடுத்துவிட்டு திரும்ப ஓடிபோய் அவனை ஒரு அடி அடித்துவிட்டு வந்தேன். அந்த வீட்டில் இருந்தபோது மஹால் முன்புறத்தில் உள்ள பூங்காதான் எங்களுக்கு காலை மாலை எல்லாம். அங்கு நடுவில் ஒரு மீன் தொட்டி, சிறிய கிணறு வடிவத்தில் இருக்கும். அங்குதான் பல் துலக்குவதே. இப்போது அந்த இடமே இல்லாமல் போய்விட்டது.
அந்த வீட்டில் இருக்கும்போதுதான் கீழே கிணற்றில் தண்ணீர் இறைப்போம். நானும் சுசி ஆச்சியும் போட்டி போட்டுகொண்டு எத்தனை இரவையில் வாழி மேலே வருகிறது என்று போட்டி போட்டு கொண்டு இறைப்போம். அவ்வாறு ஒருமுறை நான் இறைக்கும் போது, சுசி ஆச்சி வாழி வராது என்று நினைத்துக்கொண்டு தலையை குனிந்து கிணற்றுக்குள் பார்த்துக் கொண்டிருந்தபோது வாழி எதிர்பாராமல் மேலே வந்து ஆச்சியின் நெற்றியில் அடித்து விட்டது. அதனால் நெற்றியில் இரண்டு அங்குல நீளம் வெட்டி விட்டது. அந்தத் தழும்பு கூட கடைசி வரை இருந்தது.
அப்போது எனக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்பப் பிடிக்கும். தினமும் இட்லி, தேங்காய் சட்னி இருக்க வேண்டும். அதுவும் மாலையில் பள்ளி விட்டு வரும்போது இட்லியும் சட்னியும் இல்லாவிட்டால் அவ்வளவுதான். அப்போதெல்லாம் ஆத்தாவுக்கு மிகுந்த தலைவலி. எந்நேரமும் படுத்துக்கொண்டு அல்லது வாந்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கும். சிட்டு ஆச்சிதான் எப்போதும் என்னை அன்பாகப் பார்த்துக்கொள்ளும். தம்பி வருவான் என்று காலையில் இட்லி அவிக்கும் போதே இரண்டு இட்லியும், சட்னியும் எடுத்துத் தனியாக வைத்து விடும்.
ஆத்தாவுக்கு அப்போது நாற்பது அல்லது நாற்பது இரண்டு வயதுதானிருக்கும். இருப்பினும் தீராத தலைவலி எதனால் என்று தெரியாததால் பல் தான் காரணமாக இருக்கும் என்று அனைத்து பல்லையும் பிடுங்கிவிட்டார்கள். பல் கட்டுவதற்கு கால தாமதமானது. இந்நிலையில் மிகுந்த தலை வலி, வாந்தி இருப்பதால் அதிகம் சாப்பிடாது. ஒரு நாள் கீழே உள்ள ஹோடேலில் ஒரு இட்லி வாங்கி வரச் சொன்னது. அப்போதெல்லாம் இரண்டு இட்லியாகதான் தருவார்கள். ஆனால் ஆத்தா பிடிவாதமாக ஒரே ஒரு இட்லி போதும் என்று வாங்கிவர சொல்லி சுசி ஆச்சியை அனுப்பியது. ஹோட்டல் காரரும் முதலில் ஒரு இட்லி தர முடியாது என்று சொல்லி பின்னர் கொடுத்து விட்டார். வாங்கி வந்த இட்லி சுவையாக இருந்ததாலோ அல்லது பசியின் காரணமாகவோ ஆத்தா மறுபடி ஒரு இட்லி வாங்கிவரச் சொல்ல, சுசி ஆச்சியும் போய் கேட்க ஹோட்டல் காரன் சண்டைக்கு வந்து சுசி ஆச்சியை திட்டி விட்டான். சுசியும் ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தது ஞாபகம் வருது.
இந்த நிலையில் அண்ணனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நாங்கள் நெற்குப்பைக்கு சென்றுவிட்டோம். மீண்டும் நெற்குப்பை நினைவுகள் தொடரும்.

Dialogue - My presentation to the Planning Commission of India on 28th October, 2010.
Process of Government – Industry Consultations
Suggestions to Improve further
KRG with Shri. Arun Meira, Chairman, Expert Group, Planning Commission of India on 28th October, 2010.
Preamble:
"Democracy is an infinitely including spirit.
We have an instinct for democracy because we have an instinct for wholeness...
Democracy is the self-creating process of life... projecting itself into the visible world...
so that its essential oneness will declare itself."
— Mary Parker Follett.
An emerging form of democracy offers hope for generating the wisdom our cultures need to survive the 21st century and co-evolve into higher levels of awareness and aliveness. The new democracy is grounded in the power of true dialogue among diverse people to help The People (as a whole) transcend the limits of personal perspectives and resonate with each other and the world through the fact of their interconnectedness,
revealing bigger pictures and deeper wisdom than any individual or group could find alone, making it possible to create together solutions, visions, communities and societies that make sense and serve Life now and for generations to come.
Thousands of people have experienced this sort of powerful “generative dialogue” in personal conversations, workshops, and spiritual communities. But only recently has a movement emerged to bring the living power of generative dialogue into the very structures and processes of modern politics and government.
Some efforts involve helping existing officials and institutions use generative dialogue. Others involve creating entirely new institutions which place generative citizen and stakeholder deliberations at the center of social decision-making. It is already happening. There is much reason for hope — and for hard work.
DIALOGUE:
Dialogue as a genre in the Middle East and Asia dates back to Sumerian disputations preserved in copies from the early second millennium BC[2] and to Rigvedic Dialogue hymns and to the Mahabharatha.
Any Advocacy has to be commenced only with a Dialogue which is supposed to have THREE Parts.
1. Appealing to the Emotions
2. Appealing to the Rationale Mind
3. Quoting the LAW.
It is applicable to all parties involved in the Dialogue. It is more specific and applicable when it comes to the question of Government or Ruler being one of the parties. Everyone should try to exhaust all these avenues before resorting any other type of protest and if none of the above is unproductive, then only they should seek remedy through other course of action.
Today, dialogue is used in classrooms, community centers, corporations, federal agencies, and other settings to enable people, usually in small groups, to share their perspectives and experiences about difficult issues. It is used to help people resolve long-standing conflicts and to build deeper understanding of contentious issues. Dialogue is not about judging, weighing, or making decisions, but about understanding and learning.
Dialogue dispels stereotypes, builds trust, and enables people to be open to perspectives that are very different from their own.
In the past two decades, a rapidly-growing movement for dialogue has been
developing. Let’s look at some of the fascinating news and possibilities.
Success Stories of TANSTIA
MSME Policy in Tamilnadu:
The State Government wanted to bring out an exclusive Policy for the Micro, Small and Medium Enterprises in Tamilnadu. The task was given to the Secretary, Small Industry and the Commissioner of Industries &
Commerce under the able guidance of the SSI Minister, Shri. Ponagalur N. Palanisamy. TANSTIA,
being the Sole representative of the Stake Holders was roped into the Consultations and Dialogue.
This proved a very grand success. The Policy which was welcomed and appreciated by the Small
Industry fraternity all over the state. The highlight of it was, the Chief Minister, Shri. M. Karunanidhi released the Policy Documents in a simple function and the First copy was received by The then President of TANSTIA Mr. Shanmugavelayuthan.
VAT Implementation:
For the first time in the History of Taxation, a high level committee was formed to frame the Rules and Regulations of the New Tax System. Representations were given to Trade and Industrial bodies apart from the Member of Legislative Assembly. Once the Draft was made ready, it was presented to all the Stake Holders and their opinions and suggestions were invited and incorporated wherever necessary. With the result the change over from GST regime to VAT was a cake walk.
Industrial Estate Survey and Upgradation of Facilities:
TANSIDCO a Government of Tamilnadu undertaking has established several Industrial Estates in Tamilnadu. Ambattur and Guindy Industrial Estates were the larger ones and also the older ones which were lacking infrastructural facilities. By the instance of TANSTIA, the Government of Tamilnadu came forward to conduct a Survey in these industrial estates and enumerate the Registered and Un-Registered units functioning in
these estates and come out with a comprehensive report. The highlight of this exercise was, the responsibility of conducting the survey was given to TANSTIA and TANSTIA has perfectly executed the task. As a
follow-up of this exercise, TANSIDCO and TANSTIA joined together in identifying and prioritizing the issues and finding our ways and means to improve the infrastructure in these two estates through PPP model. This was possible because of the able leadership provided by Mr. A. Shanmugavelayuthan, the then President of TANSTIA.
Conclusion:
National Coalition for Dialogue and Deliberation – a website serves as a hub for dialogue (and deliberation) facilitators, conveners, and trainers and houses thousands of resources on these communication methodologies. Dialogue is a delicate process. Many obstacles inhibit dialogue and favor more confrontational communication forms such as discussion and debate. Common obstacles including fear, the display or exercise of power, mistrust, external influences, distractions, and poor communication conditions can all prevent dialogue from emerging. Structured dialogue represents a class of dialogue practices developed as a means of orienting the dialogic discourse toward problem understanding and consensual action. Whereas most traditional dialogue practices are unstructured or semi-structured, such conversational modes have been observed as insufficient for the coordination of multiple perspectives in a problem area. A disciplined form of dialogue, where participants agree to follow a framework or facilitation, enables groups to address complex problems shared in common.
Today, structured dialogue is being employed by facilitated teams for peacemaking, global indigenous community development, government and social policy formulation, strategic management, health care, and other complex domains. Let us hope this exercise by the Planning Commission of India also brings out
positive results in this direction and pave way for many more structured dialogues between the Government and the Stake Holders.

Saturday, October 16, 2010
Nerkuppai - malarum ninaivukal-1.
நெற்குப்பை - மலரும் நினைவுகள் - பகுதி 1 .
நெற்குப்பை ஒரு அழகிய ஊர். இந்தியாவில், தமிழ்நாட்டில், முந்தய இராமநாதபுரம் மாவட்டம், தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ளது. நகர் பஞ்சாயத்தாக விளங்கும் இக்கிராமத்தில் சுமார் 2000 பேர் வசிக்கிறார்கள். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் மிகவும் சிறப்பானதொரு இடத்தில் இருந்தது. இங்கு ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நூலகம், தொலை பேசி இணைப்பகம், வங்கி என்று எல்லா வசதிகளுமே உள்ளது. இங்குள்ள சபாபதி வித்யாலயம் என்ற பள்ளியில்தான் நான் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். இப்பள்ளியை மாதவ ஐயர் என்பவர் நடத்தி வந்தார். அவருக்கு சேகர் மற்றும் மோகன் என்ற இரண்டு மகன்களும் பிரேமா என்ற மகளும் இருந்தனர். இவர்களில் பிரேமா அக்கா மிகவும் நல்லவர்கள். மோகன் என்னுடைய வகுப்பு.
இப்பள்ளியில் ராஜாமணி வாத்தியார் ஒருவர் இருந்தார். லட்சுமி டீச்சர், சுப்புணி (சுப்பிரமணி) இருந்தார்கள். இங்கு என்னுடன் லெட்சுமணன், பழனியப்பன், கதிரேசன், மலைசாமி, மீனா, இன்பவல்லி ஆகியோர் படித்தனர்.
ராஜாமணி வாத்தியார் மிகவும் நல்லவர். இவர் சுவாமி சிவானந்தரின் சீடர். நான் இவருக்கு மிகவும் செல்லம். இவர், ஊர் கடைசியில் செட்டி ஊரணி எதிரில் உள்ள பங்களா? வில் குடியிருந்தார். இங்கு பல்வேறு மரங்கள் இருக்கும். இங்கு நானும் எனது ஆச்சி சுசீலாவும் டியூஷன் போவோம். அங்கு உள்ள மாதுளை மரத்தில் சிறு சிறு காய் காய்த்திருக்கும். இந்தக் காய்களை பறிப்பதில் எங்களுக்குள் சண்டை வரும். அப்படி ஒரு நாள் சண்டை வந்தபோது கையில் வைத்திருந்த பிலேடால் ஆச்சியின் புறங்கையில் கீறி விட்டேன். அப்போது ராஜாமணி வாத்தியார் என்னை அடிக்க வந்து விட்டார். இருப்பினும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பேசவில்லை. நான் அழுது கொண்டே இருந்தேன். பிறகு நல்ல அறிவுரை சொல்லி அணைத்துக்கொண்டார். சுசி ஆச்சியின் புறங்கையில் இந்தத் தழும்பு கடைசி வரை இருந்தது.
சபாபதி வித்தியாலயத்தில் நான் படிக்கும் போது நிறைய நாடகங்கள், போட்டிகள் நடத்தப்படும். அதில் என் படகு ஐலசா என்று படகோட்டும் போதே வில்லுப்பாட்டு மாதிரி ஒரு பாட்டு பாடப்படும். அதில் சில செய்திகள் இருக்கும். அதில் நான்தான் முதலில் உட்கார்ந்து படகோட்டுவேன். கூட்டத்தில் முன் பகுதியில் இருக்கும் ஆச்சிமார்கள் அடி, இது நம்ம காக்காவெட்டி வீட்டு மீனி ஆச்சி மகன்ல என்று பேசுவார்கள். அதைக் கேட்கும்போது ஏதோ உலகை வென்றது போல இருக்கும்.
நான் சபாபதி வித்தியாலயத்தில் படிப்பதற்கு முன் மதுரையில் மஹால் எதிரே உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒரு 6 மாதங்கள் படித்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அது பற்றிய மலரும் நினைவுகள் தொடரும் ........

My Blog
My dear Friends/ Relatives and other viewers.
I am Gnanasambandan hailing from a small village Nerkuppai, in Sivagangai district, Tamilnadu, India. Now a days the social media, (Blog, Twitter etc.) gaining momentum. So, I thought let me have a Blog. I assure you that I will post only useful topics and I will not abuse this powerful media. Let us hope to get the best out of it. I would only request you to kindly let me have your views, suggestions and also advice if necessary and fel free to write to me. Bye!

Subscribe to:
Posts (Atom)